உள்ளூர் செய்திகள்

ஹூஸ்டன் பல்கலை விழா முதல்வருக்கு அழைப்பு

சென்னை: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள, ஹூஸ்டன் பல்கலையில், தமிழ் இருக்கை துவக்க விழாவில் பங்கேற்குமாறு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அழைப்பு விடுத்தனர்.ஹூஸ்டன் பல்கலையில், தமிழ் இலக்கியம், பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த, திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசு இதுவரை, 3.44 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இப்பல்கலையில் செப்டம்பர் முதல் வாரத்தில், தமிழ் இருக்கை துவக்க விழா நடக்க உள்ளது. ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் செயலர் பெருமாள் அண்ணாமலை, நேற்று முன்தினம், சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.அப்போது, நிதியுதவி அளித்ததற்காக நன்றி தெரிவித்த அவர், விழாவுக்கு வரும்படி, முதல்வருக்கு அழைப்பு விடுத்தார். சந்திப்பின்போது, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குனர் அருள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்