மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி தொகை அதிகரிப்பு
சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை அதிகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ/.2 ஆயிரமாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாகவும் , 9-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான உதவித்தொகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாகவும், இளங்கலை மாணவ, மாணவிகளுக்கான உதவித்தொகை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும், முதுகலை மாணவ, மாணவிகளுக்கான உதவித்தொக ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.14 ஆயிரமாகவும்அதிகரிக்கப்பட்டு உள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.