அரசு பள்ளியில் தமிழ் மரபு விளையாட்டு
பாலமேடு: அழிந்து வரும் தமிழ் மரபு விளையாட்டுகளை டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.இப்பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் மரபு விளையாட்டுகள் அறிமுக விழா, போட்டி நடந்தது. பச்சைக் குதிரை, கிட்டிப்புல், பாண்டியாட்டம், கிச்சுகிச்சு தாம்பூலம், பல்லாங்குழி ஆகிய போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். அறக்கட்டளை மதுரை கிளை பொறுப்பாளர் சுலேகா பானு, லேடி டோக் கல்லுாரி பேராசிரியை பாப்பா மரபு விளையாட்டுகள் குறித்து விளக்கினார்.ஊராட்சி தலைவர் கூடம்மாள், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ரங்கநாயகி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம், உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் ஈஸ்வரன் பங்கேற்றனர். போட்டி நடுவர்களாக பள்ளி ஆசிரியர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள் செயல்பட்டனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.