தவறான தொடுதல் எது? பள்ளிகளில் விழிப்புணர்வு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுக்கும் வகையில் அரசு பள்ளிகளில் பாதுகாப்பான பள்ளி, பாதுகாப்பான ராஜஸ்தான் என்ற தலைப்பிலான பிரசாரத்தை அம்மாநில அரசு துவக்கியுள்ளது.இதன் முதற்கட்டமாக, மாநிலம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளில் பாலியல் ரீதியான தாக்குதலை சமாளிக்கும் வகையில், தவறான தொடுதல் எது, சரியான தொடுதல் எது என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள் நடந்தன. இதில், ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், உளவியலாளர்கள் உள்ளிட்டோர், மாணவர்களுக்கு தவறான தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாநிலம் முழுதும் 65,284 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 57 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.