பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு: அண்ணாமலை கோரிக்கை
சென்னை: தேவையில்லாத விளம்பர செலவுகளை விடுத்து, மாணவர்களுக்கு பயன்படும் பள்ளி கட்டடங்களை உடனே கட்டி தர வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கடலுார் மாவட்டம், பண்ருட்டி, சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சமையல் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் சத்துணவு பெண் அமைப்பாளர் படுகாயம் அடைந்துள்ளார். அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகம் முழுதும் சிதிலமடைந்து இருக்கும், 10,000த்திற்கும் அதிகமான பள்ளி கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்கள் கட்ட போவதாக அறிவித்த தி.மு.க., அரசு, அதன்பின், அதுகுறித்து பேசுவதே இல்லை. பெரும் விபத்து ஏற்பட்டால் தான், தமிழக அரசுக்கு முழிப்பு வருமா? தேவையில்லா விளம்பர செலவினங்களை விடுத்து, மாணவர்களுக்கு பயன்படும் பள்ளி கட்டடங்களை உடனே கட்டி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.