அருணாச்சல் ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தின் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் நேதாய் சந்திர டேவுக்கு 2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் உள்ள பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு அளிக்கிறது. இந்த வரிசையில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் திரப் மாவட்டத்தில் உள்ள நரோத்தம் நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி ஆசிரியர் நேதாய் சந்திர டேவுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள டே, பாடப் புத்தகங்களை தாண்டி, பல்வேறு சமூகப் பணிகளின் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.