உள்ளூர் செய்திகள்

காலை சிற்றுண்டி மையத்தில் தீ விபத்து

அன்னுார்: கோவை அருகே அரசு துவக்கப் பள்ளியில், காலை சிற்றுண்டி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் சேதமாயின.கோவை அருகே கொண்டையம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 22 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு கடந்த மாதம் 25ம் தேதி முதல் காலை சிற்றுண்டி சமையல் கூடம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை, திட்ட ஊழியர் கவிதா பணிக்கு வந்துள்ளார். சமையல் செய்யும் போது திடீரென காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பரவியது. அன்னுார் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இங்கு, கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார், சர்க்கார் சாமக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய்ராஜ், ரமா, ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்