உள்ளூர் செய்திகள்

வகுப்பறைக்கு வெளியே வாழ்க்கை கல்வி அதிகம்

நங்கவள்ளி: தமிழ் கனவு, தமிழ் மரபு, பரப்புரை நிகழச்சி நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசியதாவது:தமிழ் கனவு நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியரான நீங்கள் வகுப்பறையில் கற்பதை விட அதற்கு வெளியே கற்க வேண்டிய வாழ்க்கை கல்வி அதிகம் உள்ளது.மனித வாழ்க்கை என்பது கலை, இலக்கியம், படைப்பாற்றல் என, பன்முகங்களை கொண்டதாக உள்ளது. நாம் பிறந்த மண் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை பல மாநிலங்களுக்கு செல்லும்போது நம்மால் உணர முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, சமத்துவம் சமூக நீதியும் தலைப்பில் நாகப்பட்டினம் எம்.எல்.ஏ., ஆளூர் ஷானவாஸ் பேசினார். சிறந்த கேள்வி கேட்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்