நான் முதல்வன் திட்ட தகுதி தேர்வு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறுவோருக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்வு நடந்தது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,பணிகளுக்கான போட்டி தேர்வு நடத்துகிறது. தமிழக இளைஞர்கள் அதிக அளவில் வெற்றிபெறும் வகையில் பயிற்சி பெறுவதற்கு, தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தில் உதவித்தொகை வழங்குகிறது. அதன்படி 1000 பேருக்கு 10 மாதங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 வீதம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்வு திண்டுக்கல்லில் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, அச்யுதா மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களின் நடந்தது. 566 பேர் தேர்வு எழுதிய நிலையில் 409 பேர் ஆப்சென்ட் ஆகினர்.