உள்ளூர் செய்திகள்

நுாறு பாரதியார்களுடன் பாரதி விழா கோலாகலம்

அவிநாசி: மகாகவி பாரதியார் நினைவு தினத்தையொட்டி, அவிநாசி அரசு கல்லுாரியில், தமிழ்த்துறை சார்பில், பாரதி விழா கொண்டாடப்பட்டது.விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை தாங்கினார். தமிழ் துறை பேராசிரியர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். 100 மாணவ, மாணவியர் பாரதி போல் வேடம் அணிந்து கல்லுாரி வளாகத்தில் ஊர்வலமாக வீரநடை போட்டு வலம் வந்தனர். மைதானத்தில் பாரதி என்ற எழுத்து வடிவத்தில் நின்று காட்சியளித்தனர்.பாரதியார் கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்ற 300 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாரதியார் பாடல்களை மாணவர்கள் பாடினர். தமிழ் துறை பேராசிரியர் புனிதராணி, நந்தினி, ஜோதிபாண்டி, சரவணன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்