உள்ளூர் செய்திகள்

கடலுார் அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு

கடலுார்: கடலுார் அரசு பள்ளிகளில் கலெக்டர் அருண்தம்புராஜ் திடீர் ஆய்வு செய்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம் குறித்து அறிந்தார்.கடலுார் கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று காலை திடீரென, திருப்பாதிரிபுலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு சென்று, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கவனித்தார். பின்னர், பள்ளி செயல்பாடுகள் குறித்தும் மாணவிகள், ஆசிரியர்களிடம் கேட்டறிந்து கலந்துரையாடினார். தொடர்ந்து, திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.அப்போது, மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர் நல்ல மதிப்பெண்கள் பெற பாடத்தை நன்கு புரிந்து படிக்க வேண்டும். புத்தகத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும். தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபட வேண்டாம். நல்ல எண்ணன் உடையவராக இருந்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என மாணவ மாணவியருக்கு அறிவுரைகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்