உள்ளூர் செய்திகள்

அண்ணாதுரை படித்த பள்ளியில் உறுதிமொழி ஏற்பு

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில், 1907ம் ஆண்டு துவக்கப்பட்ட பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.தமிழக முன்னாள் முதல்வரான அண்ணாதுரை, 1914ல் தன் ஆரம்ப கல்வியை, இப்பள்ளியில் தான் துவக்கினார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பயின்ற, சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் கிளை இடைநிலைப்பள்ளியில், அவரது 115வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமையில், ஆசிரியர்கள், மாணவர்கள் அண்ணாதுரையின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து ஆசிரியர்களும், ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்