உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலையில் உடனடி மாணவர் சேர்க்கை

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை இணைப்பு கல்லுாரிகளில் காலியாகவுள்ள இடங்களை, நிரப்புவதற்கான மூன்றாம் கட்ட உடனடி மாணவர்கள் சேர்க்கை, அக்., 10ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.நேரடியாக கோவை வேளாண் பல்கலையில் நடக்கும் கலந்தாய்வில், வருகை பதிவு, காலை, 8:00 மணி முதல் 10:00 மணி வரை பெறப்படும். இச்சேர்க்கை வேளாண் பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கு மட்டுமே பொருந்தும்; உறுப்பு கல்லுாரிகளுக்கு பொருந்தாது. இதில், இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களிடம் மட்டுமே கலந்தாய்வு கட்டணம் வசூலிக்கப்படும்.பொது கலந்தாய்வில், இடம் கிடைக்கப்பெற்று கலந்தாய்வினை தவற விட்டவர்கள் மற்றும் இடம் கிடைத்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள், இதில் பங்கேற்கலாம். இணைப்பு கல்லுாரிகளில், ஆண்டு கட்டணம், விடுதி, உணவு கட்டணம் தவிர்த்து 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட மாணவர்கள் விபரங்கள், காலியிடங்களுக்கான அட்டவணை பல்கலை இணையதளத்தில், http://tnagfi.ucanapply.com வெளியிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்