உள்ளூர் செய்திகள்

தேசிய கல்வி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தொழிலாளர் குடும்பத்தின் குழந்தைகளுக்கு, தேசிய கல்வி உதவித்தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மத்திய அரசின், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பீடி மற்றும் சுண்ணாம்பு கல், சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு, 2023 -24 ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதற்காக, https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நவ., 30ம் தேதியும், உயர் கல்வி மாணவர்கள் டிச., 31க்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, மத்திய நல கமிஷனர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, சிட்கோ நிர்வாக கிளை அலுவலகம், கிண்டி, மற்றும் 044- - 2953 0169 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்