உள்ளூர் செய்திகள்

சேமிப்பு பழக்கத்தை துாண்டிய இலக்கிய களம்

திண்டுக்கல்: திண்டுக்கல், வார்த்தைகளின் வண்ணங்கள் வாசிப்பின் வடிவில்தான் புலப்படும் என்ற மெய்மொழியை உணர்ந்து திண்டுக்கல் டட்லி பள்ளி மைதானத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் வாசகர்கள் குவிகின்றனர். 126 ஸ்டால்களுடன் செயல்படும் இங்கு ரூ.2கோடிக்கு அதிகமாக புத்தகங்கள் விற்பனை நடந்துள்ளது.இங்கு வந்தோர் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கியது பசுமைக்கும் வித்திட்டது இலக்கிய களம். பத்து நாட்கள் நடந்த புத்தக திருவிழாவில் கலைமகளின் தாண்டவம் அரங்கம் முழுக்க நிறைந்திருந்தை கல்வி கண்களால் மட்டுமே காண முடிந்தது.சாதனை சிகரம் தொட்டதுசரவணன், மாவட்ட இலக்கிய கள துணைத்தலைவர்: கட்டணமில்லா சேவையில் புத்தக விற்பனையை மட்டுமே இலக்காக கொண்டு மக்களை அரங்கிற்குள் அழைத்து வந்ததில் கலைநிகழ்ச்சிகளின் பங்கு அளப்பரியதாகும். இந்த ஆண்டு புத்தக விற்பனை சாதனை சிகரமாக உயர்ந்துள்ளது என்பதை மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.புத்தக நன்கொடையும் இருந்ததுகண்ணன், நிர்வாக செயலாளர்: புத்தக திருவிழாவே கற்றோர்களின் மாபெரும் அடையாளமாகும். இந்தாண்டு புத்தகங்கள் வாங்குபவர்களோடு புத்தக நன்கொடையாளர்களும் அதிகம் தென்பட்டனர். இந்த புத்தகங்கள் அரசு நுாலகங்களிலும், அரசு பள்ளி குழந்தைகளுக்குமாக சிறப்பான சேவையாக உள்ளது.அரங்கத்தின் பரப்பை கூட்டலாம்மனோகர், நிர்வாக தலைவர்: புத்தக திருவிழாவை சுற்றி பார்க்க வந்தவர்கள் கூட புத்தகங்களை வாங்கி செல்ல வைத்த சாதனை இந்த ஆண்டில் தென்பட்டது. குறிப்பாக மாணவர்களின் பங்கு வியப்பளிக்கிறது. அடுத்து அரங்கத்தின் பரப்பளவை கூட்டினால்தான் தாங்கும் என்கிற அளவிற்கு புத்தக பிரியர்கள் திடலை சூழ்ந்து விட்டனர்.திருப்தியான செயல்கரோலின் செல்வியா, பேராசிரியர், அண்ணா பல்கலை: புத்தக திருவிழாவில் ஆண்டு தோறும் வந்து 10சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் வாங்கி செல்வேன். இந்த ஆண்டும் வாங்கியது மனதிருப்தியான செயலாக அமைந்துள்ளது. பதிப்பகங்களின் பெயர் பட்டியல் படி ஸ்டால்களில் வேண்டிய புத்தகங்களை வாங்கி செல்ல எளிதாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்