உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏரோமாடலிங் பயிற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ -மாணவியருக்கு, கல்வி 40 காஞ்சி டிஜிட்டல் டீம், 360 ப்ளையிங் கிளப் சார்பில், ஏரோ மாடலிங் பயிற்சி காஞ்சிபுரம் அரசு கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.இதில், கல்வி 40 குழு நிறுவனர் பிரேம்குமார், 360 ப்ளையிங் கிளப் நிறுவனர் டாக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் விமானத்தின் வடிவமைப்பு, அது உருவாக்கப்படும் விதம், எவ்வாறு செயல்படுகிறது என, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.இப்பயிற்சியில் தேர்வு செய்யப்படும் மாணவர்களை குழுவாக பிரித்து, 3 மாதங்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கப்படும். வரும் 2024 ஜனவரியில் நடக்கும், ஏரோ மாடலிங் ரேஸ் போட்டியில், குறிப்பாக ஐ.ஐ.டி., மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இப்போட்டியில் முதன் முறையாக அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்நிகழ்ச்சியை கல்வி 40, காஞ்சி டிஜிட்டல் டீம் குழுவின் ஆசிரியர்கள் அன்பழகன், பழமலைநாதன், ராமலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்