கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநாடு
உடுமலை: தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு, திருப்பூர் லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது. மாவட்ட தலைவர் நந்தகுமார், துணை தலைவர் சரவணமூர்த்தி தலைமை வகித்தனர். மாநில தலைவர் சேகர், மாநாட்டை துவக்கி வைத்தார்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வித்துறையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, பள்ளி மற்றும் மாதிரி பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளருக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.