ஜனவரியில் செய்முறை தேர்வு: சி.பி.எஸ்.இ., ஏற்பாடு
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு, பிப்ரவரியில் செய்முறை தேர்வுகள் நடத்துவது வழக்கம். அதேபோல், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தேர்வு நடக்கிறது.இதனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஜனவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வுகளை துவங்கி, பிப்ரவரிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க, பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.