உள்ளூர் செய்திகள்

மாணவர் பார்லிமென்ட்: மாநகராட்சி கல்லுாரி அசத்தல்

பிரேசர்டவுன்: பெங்களூரு பிரேசர்டவுன் மாநகராட்சி மகளிர் பி.யூ., கல்லுாரியில் நேற்று நடந்த மாணவர் பார்லிமென்ட் நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று விவாதங்களில் ஈடுபட்டனர்.பெங்களூரு காடுகோடி அருகே உள்ள சீகேஹள்ளி கிராம பஞ்சாயத்து பா.ஜ., உறுப்பினர் சம்பத் ராமானுஜம், ஜனநாயகம் குறித்து பயிற்சி அளிக்க, அமெரிக்காவின் உள்துறையால் தேர்வு செய்யப்பட்டார்.இவர், பார்லிமென்ட் நிகழ்வுகள் எப்படி நடக்கிறதோ அதேபோன்று, 1,000 கல்லுாரி மாணவர்களுக்கு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இதன்படி, நகரின் ஹொஸ்கோட்டில் உள்ள கேப்ஸ்டோன் ஹை என்ற உயர்நிலைப்பள்ளியில், சமீபத்தில் மாணவர் பார்லிமென்ட் நிகழ்ச்சி நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பயிற்சிஇதுபோன்று, பிரேசர் டவுனில் உள்ள பெங்களூரு மாநகராட்சி மகளிர் பி.யூ., கல்லுாரியில் நேற்று மாணவர் பார்லிமென்ட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவ பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஜனநாயக முறைப்படி, பார்லிமென்ட் கூட்டம் எப்படி நடக்கும் என்பது குறித்து, சம்பத் ராமானுஜம் மாணவியருக்கு பயிற்சி அளித்தார். அதன்படி மாணவியரும் சிறப்பான முறையில் செயல்பட்டனர்.விவசாயிகள் பிரச்னை, ஏரிகள் மேம்பாடு, மகளிர் உரிமைகள், ஒலி மாசு உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. மேலும், யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள், புதிதாக வந்துள்ள ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி மிகவும் ஆர்வத்துடன் விவாதம் நடத்தியது சுவாரஸ்யமாக இருந்தது.சபாநாயகரின் பணி, முதல்வர், எதிர்க்கட்சி தலைவரின் பணி, பார்லிமென்டின் கண்ணியம் காப்பது, பூஜ்ய நேரம், ஒத்திவைப்பு தீர்மானம், சட்ட மசோதா தாக்கல் செய்வது போன்றவை குறித்தும் சொல்லி கொடுக்கப்பட்டன.சான்றிதழ்கள் வழங்கல்இறுதியாக இந்த பள்ளியில், மூன்று மாணவியர் பெங்களூரு இளைஞர் சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இறுதி கூட்டத்தில், 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2024 ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினத்தன்று பெரிய நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்