உள்ளூர் செய்திகள்

நன்கொடை புத்தகங்கள் அரசு பள்ளிகளுக்கு வழங்கல்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கரூர் புத்தக திருவிழாவில் கொடை நுால் கொத்தளம் அரங்கில், பொதுமக்களிடம் நன்கொடையாக பெறப்பட்ட புத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.கரூர் புத்தக திருவிழாவில், மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் கொடைநுால் கொத்தளம் அரங்கில் பொதுமக்களிடமிருந்து, 73 ஆயிரத்து, 236 ரூபாய்- மதிப்பிலான, 1,511 புத்தகங்கள் நன்கொடையாக பெறப்பட்டன. அந்த புத்தகங்களை புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி, புதுவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, நாகனுார் அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கண்ணன், திட்ட இயக்குனர்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளர்ச்சி முகமை), சீனிவாசன் (மகளிர் திட்டம்) உள்பட பலர் பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்