திகார் சிறையில் கைதிகளுக்கு ஆங்கில வகுப்புக்கள்
நாள்தோறும் இரண்டு மணிநேரம் நடத்தப்படும் இந்த வகுப்புக்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் படிப்பவர்களின் படிக்கும் ஆர்வம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆண் மற்றும் பெண் கைதிகள் தவறாது இவ்வகுப்புக்களில் ஆர்வமுடன் பங்கேற்பதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறை அதிகாரி சுனில் குப்தா கூறுகையில், இங்கு இருப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்; அவர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும்; அவர்கள் தங்களுடைய கற்றுக் கொடுக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, உடன் இருக்கும் கைதிகளுக்கும் ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கின்றனர்; இது அவர்கள் விடுதலையாகி போன பிறகும் உதவக் கூடியதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். திகார் சிறையில் தற்போது 447 பெண் கைதிகள் உட்பட 11,246 கைதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.