கல்வி பிரச்னைகளை தீர்க்க குறைதீர் மன்றம்?
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், மாணவர்கள் இடையிலான மோதல், பெற்றோர், ஆசிரியர் இடையிலான பிரச்னைகள் போன்றவை, சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. இவற்றில் உள்ள உண்மை தன்மையை அறிந்து கொள்ளவும், விசாரணை நடத்தி குறைகளை தீர்க்கவும், தனியாக குறை தீர் மன்றம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: ஆசிரியர், மாணவர் இடையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த விவகாரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோரே விசாரிக்கும் நிலை உள்ளது.இதில், இரு தரப்பினர் இடையே நடுநிலையான தீர்வுகள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, ஓய்வுபெற்ற நீதிபதிகளை தலைமையில், மாவட்ட, மாநில அளவில் கல்வித்துறை குறை தீர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.