பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே போட்டிகள்
காஞ்சிபுரம்: தியாகம் போற்றுவோம் அமைப்பு சார்பில், டிச., 1ல் எல்லை பாதுகாப்பு படை துவக்க நாள் விழா நடக்கிறது. இதையொட்டி பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியம், மேட்டுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, திருமுக்கூடல், கணபதிபுரம் உள்ளிட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில் இப்போட்டி நேற்று நடந்தது.இதில், கவிதை, ஓவியம், களிமண்சிற்பம் உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ- மாணவியர் பங்கேற்றனர். மாணவர்கள் தங்களது படைப்புகளை போட்டி நடுவர்களிடம் சமர்ப்பித்துள்ளனர் என, எல்லை பாதுகாப்பு படை வீரரும், தியாகம் போற்றுவோம் அமைப்பின் நிறுவனருமான கிள்ளிவளவன் தெரிவித்துள்ளார்.