உள்ளூர் செய்திகள்

பல்கலை சம்பள பிரச்னைக்கு சென்னைக்கு போங்க!

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் நிதி நெருக்கடியால் நிலவும் சம்பள பிரச்னைக்கு தீர்வுகாண, சென்னை சென்று அதிகாரிகளிடம் முறையிட்டு நிதி பெற்றுதர துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர்கள், அலுவலர்கள் வலியுறுத்தினர்.நிதி நெருக்கடியால் இப்பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்களுக்கான நவம்பர் சம்பளம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் பல்கலை கூட்டு நடவடிக்கை குழு (எம்.கே.யு., ஜாக்) நிர்வாகிகள் புஷ்பராஜ், வேளாங்கண்ணி ஜோசப், முத்தையா, முருகன், சுந்தரமூர்த்தி, பத்மா உள்ளிட்டோர் துணைவேந்தர் குமாரை சந்தித்து பேசினர்.அப்போது நிதி நெருக்கடியை தீர்க்க சென்னை சென்று நிதித்துறை, உயர்கல்வித்துறை அமைச்சர்கள், செயலர்களை சந்தித்து பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என துணைவேந்தரிடம் வலியுறுத்தப்பட்டது. டிச.,4ல் பதிவாளர் சென்னை செல்வார் என துணைவேந்தர் கூறினார்.அதற்கு துணைவேந்தர் சென்னை சென்றால் தான் தீர்வு கிடைக்கும் என வலியுறுத்திய நிர்வாகிகள், டிச.,4ல் சம்பளம் வழங்காவிட்டால் தொடர் போராட்டம் துவங்கும் என எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்