உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தேனி: தேனி மாவட்ட விளையாடரங்கில் சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ரங்கோலி, கட்டுரைப்போட்டி, போஸ்டர் மேக்கிங், புகைப்பட போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ஷஜீவனா பரிசுகள் வழங்கினார்.கட்டுரைப்போட்டியில் முதல்பரிசை மாலினி, இரண்டாம் பரிசை சாந்தாகுமாரி, 3ம் பரிசை வெற்றிவேல் வென்றனர். போஸ்டர் மேக்கிங் போட்டியில் முதல்பரிசை ஜெயா, 2ம் பரிசை வீரலட்சுமி, விஸ்ணு, 3ம் பரிசை ஜெயகிருஷ்ணன் வென்றனர். ஆண்களுக்கான ரங்கோலி வரைதல் போட்டியில் முதல்பரிசை ஜெயகிருஷ்ணன், பாலாஜி, ஜெயபிரகாஷ் ஆகியோர் வென்றனர். அலைப்பேசி புகைப்படம் எடுத்தல் போட்டியில் போட்டியின் தலைப்பிற்கு ஏற்ப யாரும் புகைப்படத்தை காட்சிபடுத்தாததால் பரிசு வழங்க வில்லை. பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்