உள்ளூர் செய்திகள்

மணிப்பூர் மாணவர்களுக்கு உதவ சட்டப்பணி குழு

சென்னை: மணிப்பூர் மாநிலத்துக்கு வெளியில் படிக்கும், அம்மாநில மாணவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட சிக்கல்கள் இருந்தால், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கடந்த ஆகஸ்ட்டில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் வழிகாட்டுதலின்படி, மணிப்பூர் மாநிலத்துக்கு வெளியே படிக்கும் மணிப்பூரி மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி, குடியிருப்பு அல்லது வேறு ஏதும் சிக்கல்கள் ஏற்பட்டால், உதவிக்கு நீதித் துறை அதிகாரியை தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் அல்லது டில்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர், டில்லி மணிப்பூர் பவனில் உள்ள உள்ளுறை ஆணையரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்