பாலக்காடு கல்லுாரியில் பாரதியார் பிறந்தநாள் விழா
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரி, தமிழ்த்துறை சார்பில் மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாள் விழா நடந்தது.கோட்டை மைதானம் அருகில், சிறுவர் பூங்காவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கல்லுாரி தமிழ்த்துறை திருவள்ளுவர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், ஆய்வாளர் சரவணகுமார் பேசினார். நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவர்களுக்காக நடந்த கவிதை மற்றும் பேச்சுப்போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழ்த்துறை தலைவர் முனைவர் ரவி, துணைப்பேராசிரியர் திருவேங்கடம் உட்பட பலர் பேசினர்.