உள்ளூர் செய்திகள்

பதவி உயர்வின்றி தவிக்கும் இளநிலை உதவியாளர்கள்

தேனி: பள்ளிக கல்வித்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக பதவி உயர்வு வழங்காமலும், தர நிர்ணய ஊதியம் உயர்த்தப்படாமலும் மாநிலம் முழுவதும் 4480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடத்தில் 4480 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தர நிர்ணய ஊதியமாக (கிரேடு பே) ரூ.2200 வழங்கி வருகிறது. பணியில் சேர்ந்து பத்தாண்டு நிறைவு பெற்ற நிலையிலும் பதவி உயர்வு வழங்கவில்லை. தேனி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இளநிலை உதவியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருக்குமரன் கூறியதாவது:அரசின் பிற துறைகளில் எங்களோடு பணிக்கு சேர்ந்தவர்கள், பதவி உயர்வு பெற்று பல்வேறு நிலைகளில் உள்ளனர். எங்களுக்கு பதவி உயர்வும் வழங்கவில்லை. தர நிர்ணய ஊதியமும் உயர்த்தவில்லை. அமைச்சர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்