உள்ளூர் செய்திகள்

கடலுாரில் நுால் வெளியீடு இறையன்பு பங்கேற்பு

கடலுார்: கடலுாரில் நாளை நடக்கும் நுால் வெளியீட்டு விழாவில், ஓய்வு பெற்ற தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்கிறார்.கடலுார் கிருஷ்ணசாமி பள்ளி முதல்வர் நடராஜன் எழுதிய கழுதை வண்டி என்ற தலைப்பிலான 150வது நுால் வெளியீட்டு விழா, கடலுார் சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் நாளை (19ம் தேதி) மாலை 5:30 மணிக்கு நடக்கிறது.கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். மாலா நடராஜன் வரவேற்கிறார். சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு நுாலை வெளியிட்டு வாசிப்பே வெல்லும் என்ற தலைப்பில் பேசுகிறார்.சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பூபதி பெரியசாமி, விக்யான் பிரச்சார் அமைப்பு கணேசன், இந்திய மருத்துவ சங்க தலைவர் கண்ணன், குழந்தை நல நிபுணர் இளந்திரையன், குமரகுரு, மாநில வரி அலுவலர் ஜனார்த்தனன் வாழ்த்திப் பேசுகின்றனர். பால்கி, கவுதமன் விழாவை தொகுத்து வழங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்