உள்ளூர் செய்திகள்

பொன்முடியின் இலாகா அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற பொன்முடியின் வசமிருந்த உயர்கல்வித்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டது. இதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது எம்எல்ஏ (திருக்கோவிலூர்) மற்றும் அமைச்சர் பதவி பறிபோகிறது.தீர்ப்பை அடுத்து, பொன்முடி வசமிருந்த உயர்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்படுகிறது. அவர் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார். இது தொடர்பாக கவர்னர் ரவிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுக்கொண்டு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்