பெண் குழந்தைகளுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: தமிழக சமூக நலத்துறை சார்பில், தேசிய பெண் குழந்தை தினமான, ஜன., 24ல், சாதனை புரிந்த பெண் குழந்தைகளுக்கு, மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது.விருது பெற, சென்னை மாவட்டத்தில், 13 - 18 வயதுக்குட்பட்ட தகுதி உள்ள குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெண் குழந்தைகளின் வீர தீர செயல்களான கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணங்கள் தடுத்தல் மற்றும் தவிர்த்தல் உள்ளிட்டவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்திருக்க வேண்டும்.விருது பெற தகுதி உள்ள குழந்தைகளில் முழுவிபரம், சாதனை குறித்து ஒருபக்கம் குறிப்புடன், https://awards.tn.gov.in என்ற இணைதளத்தில், இம்மாதம் 31ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.அவற்றை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறையில் சமர்ப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.