ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான கலந்தாய்வு அறிவிப்பு
சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III ல் அடங்கிய கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை மற்றும் பண்டக காப்பாளார், நிலை-II தொழில் மற்றும் வர்த்தகத் துறை பணிகளுக்கான மூலச்சான்று சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜன.,8ம் தேதி நடைபெற உள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்று ஆகஸ்ட் மாதம் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கான மூலச்சன்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் ஜன.,8ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.