நல்ல வாசகர்களுக்காக மலிவு விலையில் புத்தகம்
சென்னை: புத்தகக் காட்சியில் நற்றிணை பதிப்பகம், குறைந்த விலையில் புத்தகங்களை விற்று வருகின்றன. கடந்தாண்டு புத்தகக் காட்சியில், 588 பக்கங்கள் உடைய புதுமைபித்தன் சிறுகதைகள் தொகுப்பு நுால் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.தமிழக பண்பாட்டு ஆய்வாளரான தொ.பரமசிவத்தின், 120 பக்கங்கள் உடைய அறியப்படாத தமிழகம் நுால், வெறும் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மலிவு விலையில் பொன்னியின் செல்வன், ரஷ்ய எழுத்தாளர்களின் முக்கிய நாவல்கள் விற்கப்படுகின்றன.குறைந்த விலையில் விற்பது குறித்து, நற்றிணை பதிப்பகத்தை நிர்வகிக்கும் யுகன் கூறுகையில், புத்தகம் வாங்க அதிக பணம் செலவழிக்க முடியாது என்பதால், நல்ல வாசகர்களுக்காக இவ்வாறு விற்கிறேன். குறைந்த விலையில் விற்பதை, என் கடமையாக செய்கிறேன் என்றார்.