உள்ளூர் செய்திகள்

கல்வி அமைச்சரை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ஈரோடு வட்டார தமிழ்நாடு தொடக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஈரோட்டில் கருப்பு பட்டை அணிந்து, கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தொடக்க கல்வி துறையில் பணிபுரியும், 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்க கூடிய முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண்-243ஐ ரத்து செய்ய வேண்டும். இதற்காக மூன்று மாதமாக போராடி வருகிறோம். மாறாக ஆசிரியர் சங்கத்தில் ஒரு பிரிவு நடத்தும் நன்றி அறிவிப்பு கூட்டத்துக்கு செல்லும் கல்வி அமைச்சர் மகேஷின் செயல் கண்டனத்துக்குரியது. 12 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அமைச்சரை கண்டித்தும் கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணன் துவக்க உரையாற்றினார். டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து ராமசாமி ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்