உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை போட்டி

சிவகங்கை: மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறை சார்பில் தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவிய, கட்டுரை போட்டிகள் சிவகங்கையில் நடைபெற்றது.மாவட்ட அளவில் 56 பசுமை படை, சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர் ராஜராஜேஸ்வரி, சிவகங்கை வன அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். மதுரை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் அவசியம் குறித்து விளக்கினார்.ஓவியம், கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாராட்டு சான்று, பரிசும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்