அரசுப்பொதுத்தேர்வு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி
தேனி: மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு பொதுத்தேர்வு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது.மாவட்டத்தில் உள்ள 156 மேல்நிலைப்பள்ளிகளில் 13,542 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பிலும், 14, 270 மாணவர்கள் பிளஸ் 1 படிக்கின்றனர். இவர்கள் இந்தாண்டு அரசுப்பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதில் பிளஸ் 2 விற்கு மார்ச் ஒன்றிலும், பிளஸ் 1 க்கு மார்ச் 4ல் அரசுப்பொதுத்தேர்வுகள் துவங்குகிறது.தேனி மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராக பள்ளிக்கல்வித்துணை இயக்குனர் சின்னராஜூ நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடர்கள் உறவின் முறை மெட்ரிக் பள்ளியில் அரசு, உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. சி.இ.ஓ., இந்திராணி முன்னிலை வகித்தார்.பயிற்சியில் தேர்வின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள், கண்காணிப்பு குழு, பறக்கும் படை அமைப்பது உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.