உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கான பண்பாடு விளையாட்டு விழா துவக்கம்

தேனி: அரசுப்பள்ளிகளில் ஒன்றாம் முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பண்பாடு விளையாட்டு விழா போட்டிகள் இன்று துவங்குகிறது.அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 11 வகையான போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகள் பள்ளி அளவில் பிப்.,27,28,29 ஆகிய நாட்கள் நடக்கிறது.போட்டிகள் தனி நபர் பிரிவில் ஓவியம் வரைதல், கதைசொல்லுதல், மாறுவேடப்போட்டி, கைவினைப்பொருட்கள் தயாரித்தல், கருவி இசைத்தல், பாட்டுபோட்டி, கண்காட்சி, பேச்சு, பலகுரல் போட்டிகள் நடக்கிறது.குழு போட்டிகளாக பாரம்பரிய நடனம், நாட்டிய நாடக போட்டிகள் நடக்கிறது. பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணவர்களின் விவரங்கள், போட்டிகளின் வீடியோ, புகைப்படங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து வட்டார அளவில் மார்ச் 5,6,7, மாவட்ட அளவில் மார்ச் 12,13, மாநில அளவில் மார்ச் 19,20 தேதிகள் மதிப்பீடு பணிகள் நடக்கிறது. மதிப்பீடு பணியில் எமிஸ் தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்