உள்ளூர் செய்திகள்

மலையேற்றத்தில் மாயமான மருத்துவ மாணவர் மீட்பு

சிக்கமகளூரு: மலையேற்றத்துக்காக சென்று, காட்டின் நடுவில் காணாமல் போன மருத்துவ கல்லுாரி மாணவர் மீட்கப்பட்டார்.சிக்கமகளூரு, மூடிகரேவின், பல்லாள ராயன துர்காவில் வசிக்கும், கே.எம்.சி., மருத்துவ கல்லுாரி மாணவர்கள் குழுவினர், நேற்று முன்தினம் காலை, பெல்தங்கடியின், சார்மாடியின் பன்டாஜி நீர் வீழ்ச்சிக்கு மலையேற்றத்துக்கு சென்றனர். இந்த குழுவில் தனுஷ் என்ற மாணவரும் இருந்தார்.வனப்பகுதியில் செல்லும் போது, தனுஷ் குழுவில் இருந்து பிரிந்து, திசை மாறி விட்டார். அவரது மொபைல் போனும், சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. நண்பரை காணாமல் தேடியலைந்த மாணவர்கள், 112ல் தொடர்பு கொண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து அங்கு வந்த போலீசார், மாணவர் காணாமல் போன இடத்தில் இருந்து தேட துவங்கினர். மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தேடி, 700 அடி ஆழத்தில் அடர்த்தியான வனத்தின் நடுவில், தனியாக அமர்ந்திருந்த தனுஷை நள்ளிரவு கண்டுபிடித்தனர். அவரை பாதுகாப்பாக அழைத்து வந்து, நண்பர்களிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்