உள்ளூர் செய்திகள்

கல்வி கற்றல் கண்காட்சி

கம்பம்: நெடுங்கண்டம் உபகல்வி மாவட்டம் கட்டப்பனை அருகில் உள்ள சாஸ்தா நடை ஆரம்ப பள்ளியில் இடுக்கி வட்டார வள மையம் சார்பாக கல்வி கற்றல் கண்காட்சி, கற்றல் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாண்டுரங்கன் வரவேற்றார். ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி துவக்கி வைத்தார்.யோகா குறித்து பயிற்சியாளர் சுரேஷ் விளக்கினார். பாட்டு, நடனம்,பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் ஆசிரியர் முத்துராஜ், ஆசிரியைகள் ஜோய்ஸ் மோள், திவ்யா ஏற்பாடுகளை செய்தனர். ஆசிரிய பயிற்சி மாணவிகள் துர்கா, நிவேதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்