வேதி அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய கருத்தரங்கம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில், வேதி அறிவியலின் முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.டெல்லி மற்றும் அலகாபாத் அறிவியல் நிறுவனங்களுடன் இணைந்து இந்த பயிலரங்கை நடத்தியது. துறைத்தலைவர் ராஜா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முத்துசாமி பேசினார்.கல்லூரி செயலாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். அனைத்து வித்யாலயா நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்து, பயிலரங்கத்தை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் நடராஜன் பங்கேற்றார்.இதில், பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர்கள் வாசுதேவன் மற்றும் ஜகிர்தர், எதிர்காலத்தில் எரிசக்தி துறையில் ஹைட்ரஜன் பங்கு மற்றும் அம்மோனியா உருவாக்கும் முறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர்.வேதி அறிவியலின் தற்போதைய வளர்ச்சிகள் குறித்த இந்த பயிலரங்கத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவியல் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.