கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறையா இருக்கு...
கோடை விடுமுறையில், பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். மொபைலில் அதிக நேரம் செலவிடும் பழக்கத் தால் சிறுவர்களுக்கு நினைவாற்றல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். இது அவர்களை மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும் வைத்துக் கொள்ளும். கூடவே, விடுமுறை முடியும்போது, ஒரு புதிய திறன் கற்றுக்கொண்ட திருப்தியும் ஏற்படும்.டேக்வாண்டோ பயிற்சிகோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்கம் சார்பில், மாணவ - மாணவியருக்கு இலவச டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது. காந்திபார்க் பகுதியில் உள்ள மாரண்ண கவுடர் பள்ளி வளாகத்தில் வரும் 20ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை மாலை, 5:00 முதல் 7:00 மணி வரை இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. தொடர்புக்கு: 99946 17222.பிஸி பீ கிட்ஸ் சம்மர் கிளாஸ்செஸ், நடனம், ஓவியம், ஆர்ட் அண்ட் கிராப்ட், ஸ்டோரி டெல்லிங், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வகையாக பயிற்சிகள் வரும் 20 முதல் மே 20ம் தேதி வரை, அரசூர் பூங்கா நகர் பிஸி பீ மையத்தில் நடத்தப்படுகிறது. தொடர்புக்கு: 82206 58361.இலவச சைக்கிளிங் பயிற்சிகோவை மாவட்ட சைக்கிளிங் சங்கம் சார்பில் வரும் 28ம் தேதி, இலவச சைக்கிளிங் பயிற்சி நடக்கிறது. வரும் 28ம் தேதி கோவைப்புதுார் சி.பி.எம்., கல்லுாரி அருகில் காலை, 7:00 மணிக்கு இந்த முகாம் நடக்கிறது.கிரிக்கெட் பயிற்சி முகாம்கோவைப்புதுார் பகுதியில் உள்ள மாணவர்கள், கோடை விடுமுறையை செலவிடும் வகையில் '303 பிட் டிரைவ்' சார்பில், 45 நாட்கள் கிரிக்கெட் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. தொடர்புக்கு: 73739 94232.பிரணவம் நாட்டியாலயாபரதநாட்டியம், கிளாசிக்கல் வோக்கல் மியூசிக் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கட்டணம், 2,500. 4 வயது முதல் வயது வரம்பில்லை. முகவரி: கண்ணப்பன் நகர். தொடர்புக்கு: 96298 -13616.பார்த்து டேன்ஸ் கம்பெனிவெஸ்டர்ன், ஜூம்பா, போக் டான்ஸ் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 5 முதல் வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணம் ரூ.1000. முகவரி: சுங்கம், ஸ்ரீபதி பேருந்து நிலையம் அருகில். தொடர்புக்கு: 63694 -45186.நியூ ரங்காஸ் அகாடமிமேனர்ஸ் அண்ட் எத்திக்ஸ், பர்சனாலிட்டி டெவலப்மென்ட், அஸ்டிரானமி, வெஸ்டர்ன் டான்ஸ், ஆர்ட் அண்ட் கிராப்ட், டிவென்ட்டி பர்ஸ்ட் செஞ்சுரி டெக்னாலஜிஸ், டிரெடிஷனல் கேம்ஸ், போஸ்டர் மேக்கிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 10 முதல் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். 3 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிராயிங், கலரிங் அண்ட் கிராப்ட், ரீடிங் அண்ட் ஸ்டோரி டெல்லிங், மியூசிக் டான்ஸ், கிளே மாடலிங், பொனிக்ஸ், மெமரி அண்ட் டிரெடிஷனல் கேம்ஸ் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முகவரி: குரும்பபாளையம். தொடர்புக்கு: 97514- 83127, 99424 -88127.இன்ஸ்டிடிட்யூட் ஆப் மல்டிமீடியாகிராபிக் டிசைன், டிஜிட்டல் ஆர்ட் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 8 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். கட்டணம், ரூ.1,999. முகவரி: காந்திபுரம். தொடர்புக்கு: 81224 -37026, 98436 -40666.கோடை விடுமுறையில், இது போன்ற இலவச/ கட்டண பயிற்சி வகுப்புகள் நடத்துவோர், 98940 09282 என்ற எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். இலவசமாக பிரசுரிக்கப்படும்.