பிற மொழிகளை வாசிங்க தாய்மொழியை சுவாசிங்க
கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில், மகாகவி பாரதியார் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் திருக்குறள் மன்றம் துவக்க விழா நடந்தது.மாணவர்களின், குறட்பாக்களால் ஆன பாமாலை இறைவாழ்த்துடன் விழா துவங்கியது. பல்வேறு கலைநிகழ்வுகளையும் மாணவர்கள் அரங்கேற்றினர். கோவை அரசு கலைக் கல்லுாரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியை புவனேஸ்வரி, மன்றங்களை துவக்கி வைத்தார்.பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் பேசுகையில், மாணவர்கள் எல்லா மொழிகளையும் வாசிக்க வேண்டும். தாய் மொழியை சுவாசிக்க வேண்டும். இன்று நீங்கள் படிக்கும் திருக்குறள், வாழ்நாள் முழுவதும் துணையாய் நிற்கும் என்றார்.துணை முதல்வர் சக்திவேல், பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.