கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கியது
திருப்பூர்: கோடைக்கால பயிற்சி முகாம் நேற்று தொடங்கி மே 13ம் தேதி வரை நடக்கிறது.மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் கோடைக்கால பயிற்சி முகாம், 15 நாட்கள் நடக்கவுள்ளது. தடகளம், கூடைப்பந்து, வாலிபால், டேக்வாண்டோ, வாள்சண்டை ஆகிய போட்டிகளுக்கான பயிற்சி வரும், 29ல் துவங்கி, மே, 13 வரை நடக்கிறது.காலை, 6:00 முதல், 8:00 மற்றும், மாலை, 4:30 முதல், 6:30 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்கலாம். பயிற்சி கட்டணம், 200 ரூபாய். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆதார் நகல் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சி நிறைவில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு, 0421 2244899 என்ற எண்ணில் அழைக்கலாம்.