தொழில் நிறுவன விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
விருதுநகர்: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக தொழில் நிறுவன விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: அரசு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாநில, மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது.தற்போது 2023--24 ஆம் ஆண்டிற்காக மாநில அளவிலான சிறந்த வேளாண் சார் உற்பத்தி தொழில் முனைவோருக்கான விருது, மகளிர் தொழில் முனைவோருக்கான விருது, மாநில, மாவட்ட சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகள் என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக தொழில் செய்து வரும் தொழில் முனைவோர்களை விருதுகளுக்காக விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும். உத்யம் பதிவுச்சான்றுபெற்றிருக்க வேண்டும்.மே 20க்குள் விண்ணப்பப் படிவங்களை awards.fametn.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சந்தேகம் இருந்தால் மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு அணுகலாம், என்றார்.