உள்ளூர் செய்திகள்

மருத்துவ பணியாளர் பணி நேரம் நிர்ணயம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு, சுழற்சி முறையில் பணி நேரம் நிர்ணயித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு அடிப்படையில், அரசு மருத்துவ கல்லுாரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் இரண்டாம் நிலை செவிலிய உதவியாளர் மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, பணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ளார். காலை 6:00 முதல் பகல் 2:00 வரை; மதியம் 1:00 முதல் இரவு 9:00 வரை; இரவு 8:00 முதல் காலை 6:00 மணி வரை என, மூன்று விதமான பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.ஊழியர்களில், 50 சதவீதம் பேர் முதல் சுழற்சியிலும், 25 சதவீதம் பேர் இரண்டாம் சுழற்சியிலும், 25 சதவீதம் பேர் மூன்றாம் சுழற்சியிலும் பணி அமர்த்தப்படுவர் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்