உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் கட்டிய விளம்பர பலகை

சிவகங்கை : சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு மாணவர்கள் சேர்க்கைக்கான பாட பிரிவுகள், பிற சலுகைகள் குறித்த விளம்பர பலகை, அரசு ஐ.டி.ஐ., நிர்வாகம் சார்பில் சிவகங்கை நகரில் பல்வேறு இடங்களில் நேற்று கட்டப்பட்டது. குறிப்பாக கலெக்டர் அலுவலக வளாகத்திலும், இந்த விளம்பர பலகை கட்டினர். இப்பணியை அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கும் மாணவர்களே மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்