ஆசிரியர் கவுன்சிலிங் விண்ணப்பிக்க கடைசி நாள்
திருப்பூர்: ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இன்று மாலைக்கு விண்ணப்பிப்பவர் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.பணியிட மாற்றம் விரும்பும் ஆசிரியர்கள் விதிமுறைக்கு உட்பட்டு விண்ணப்பிக்க பள்ளிகல்வித்துறை அழைப்பு விடுத்தது. எமிஸ் இணையதளம் மூலம் துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க துவங்கினர்.மே, 13 முதல், 18 வரை கவுன்சிலிங் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் வசதிக்காக, இன்று (மே 25) வரை கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டது. இன்றுடன் கால அவகாசம் முடிய உள்ளதால், இன்று மாலைக்குள் விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும், என, மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அதே நேரம், ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதால், மேலும் காலநீட்டிப்பு வாய்ப்பு இல்லை. இதனால், இன்று மாலை அல்லது நாளையே கவுன்சிலிங்க்குக்கான அட்டவணை வெளியிடப்பட்டு விடும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.