உள்ளூர் செய்திகள்

தேர்வுகளில் முறைகேடை தடுக்க தொழில்நுட்ப கண்காணிப்பு

பெங்களூரு: கர்நாடக தேர்வு ஆணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும், வெப்காஸ்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தேர்வு முறைகேட்டை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு பணிகளுக்கான தேர்வு நடக்கும் போதும், பள்ளி, கல்லுாரி தேர்வுகளின் போதும் வினாத்தாள் வெளியாகி முறைகேடு நடப்பது அவ்வப்போது நடந்து வருகிறது.தேர்வு மையங்களிலும் ஆங்காங்கே முறைகேடு நடப்பதை அறிவோம். இதை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், முழுமையாக முறைகேட்டை தடுக்க முடியவில்லை.இந்நிலையில், கர்நாடக தேர்வு ஆணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும், வெப்காஸ்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தேர்வு முறைகேட்டை தடுக்க முடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக, மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்த கே.எஸ்.ஆர்.டி.சி., கர்நாடக நகர்புற குடிநீர், வடிகால் வாரியம் நடத்திய தேர்வுகளில் சோதனை முறையில் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்பட்டது. பெங்களூரு, கலபுரகி, தார்வாட், பல்லாரியில் 377 தேர்வு அறைகளில், சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டது.கட்டுப்பாட்டு அறையில் இருந்து, யார் என்ன செய்கின்றனர் என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. ஆசிரியர், மாணவர்களின் முகம், அவர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டது.இந்த சோதனை வெற்றி பெற்றதால், அடுத்தடுத்த தேர்வுகளில் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்