உள்ளூர் செய்திகள்

கல்லுாரி ஆசிரியர்கள் மோதல் மருத்துவமனையில் அட்மிட்

கோலார்: கோலார் அரசு இளநிலை கல்லூரியில் இரு விரிவுரையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருவரும் மருத்துவமனையில் 'அட்மிட்' செய்யப்பட்டுள்ளனர்.கோலார் அரசு இளநிலை கல்லுாரியில் கன்னட விரிவுரையாளர் நாகராஜும், அரசியல் அறிவியல் விரிவுரையாளராக நாகானந்த் கெம்புராஜும் பணியாற்றி வருகின்றனர்.கன்னட சாகித்ய பரிஷத்தின் முன்னாள் தலைவர் நாகானந்த் கெம்புராஜ். இவர் நடப்பாண்டில் நடந்த கன்னட சாகித்ய பரிஷத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததார். இதனால் அவர் குறித்து, அவ்வப்போது விரிவுரையாளர் நாகராஜ், வாட்ஸாப் மூலம் அவதுாறு கருத்துகளை பரப்பி வந்தாராம். இதுகுறித்து, நாகானந்த் கெம்புராஜ் கேட்டுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நாகராஜ் முகம் வீங்கியது. அவர், கோலார் மாவட்ட எஸ்.என்.ஆர்., அரசு மருத்துவமனையிலும், நாகானந்த் கெம்புராஜ், தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.கல்லுாரி விரிவுரையாளர்கள் இருவர் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து, கோலார் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சதானந்தா விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்