உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலையில் மரபணு தேர்வு பயிற்சி

கோவை: கோவை, வேளாண் பல்கலை மற்றும் பிலிப்பைன்ஸ் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மரபணுத் தேர்வு; கோட்பாடுகள் மற்றும் முறைகள் 5 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.பல்கலை வளாகத்தில் உள்ள, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் மையத்தில் நடக்கும் இப்பயிற்சியில், வேளாண் பல்கலை ஆராய்ச்சி இயக்குநர் ரவீந்தரன் தலைமை வகித்துப் பேசுகையில், 2050ம் ஆண்டுக்குள் உணவு தானிய உற்பத்தியை பாதுகாக்க, மேம்படுத்தப்பட்ட ரகங்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் தொழில்நுட்பவியல் மையத்தின் இயக்குனர் செந்தில், மரபணு தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் மற்றும் அரிசி, கோதுமையில் மரபணு தேர்வைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குனர் ரவிகேசவன், வேளாண் பல்கலை விஞ்ஞானி ராஜா ரகுபதி, தாவர உயிரி தொழில்நுட்பத் துறை தலைவர் கோகிலாதேவி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக நிறுவனங்கள், கோவை, கேரளா, பெங்களூரு வேளாண் பல்கலை பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.பயிற்சி, வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்